முதல் டெஸ்ட்: 4ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 119/2

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 368 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் டெஸ்ட்: 4ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 119/2
Published on: 

வெலிங்டன்,

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது.

நியூசிலாந்து 368 ரன்கள்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 368 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா 720 ரன்கள்

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 720 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

நியூசிலாந்து 119/2

இதனை தொடர்ந்து 352 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 4ம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து 233 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. ஆட்டத்தில் நாளை ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் முதல் டெஸ்ட் டிரா ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

X