

பெங்களூரு,
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற 4 டி20 போட்டிகளிலும் தலா 2 வெற்றிகளுடன் இரு அணிகளும் 2-2 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நாளை இரவு 7 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.