

லண்டன்,
10வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மகளிர் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இங்கிலாந்தின் பர்மிங்காம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதுவதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. இப்போட்டி ஸ்டார்ஸ் போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக உள்ளது.