வரலாற்று சாதனைப் படைத்த இந்தியா - பாகிஸ்தானுக்குப் பிறகு 2-வது அணியாக புதிய மைல்கல்

2-வது 20 ஓவர் போட்டி இன்று (சனிக்கிழமை) நடந்து வருகிறது.
இந்தியா
Published on: 

கிறைஸ்ட்சர்ச்,

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

முன்னிலை

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2-வது டி20

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்து வருகிறது. இப்போட்டியில் களமிறங்கியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

300 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய உலகின் இரண்டாவது அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 304 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மைல்கல்

அதேபோல், 299 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி, 199 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா தற்போது நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால், 200 வெற்றிகள் என்ற மைல்கல்லையும் பதிவு செய்யும்.

பந்துவீச்சு

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

181 ரன்கள் இலக்கு

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 70 ரன்களும், பெவன் ஜேக்கப்ஸ் 58 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com