

லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்ததும், இந்திய அணி முதலில் விளையாடியது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 189 ரன்களைக் குவித்தது.ஷ்ரேயாஸ் அய்யர் 68 ரன்னும், அபிஷேக் சர்மா 59 ரன்னும் எடுத்தனர்.
முதல் பாதி முடிந்தபின் மழை பெய்ததால் இரண்டாம் பாதி கைவிடப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 24 பந்தில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் என 59 ரன்கள் குவித்தார்.
முதல் பாதி முடிந்தபின் மழை பெய்ததால் இரண்டாம் பாதி கைவிடப்பட்டது.இந்தப் போட்டியில் 4 சிக்சர் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 சிக்சர்களை பூர்த்தி செய்த 5-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
மேலும், இந்த 100 சிக்சர்களை அடிக்க குறைவான பந்துகளை எடுத்துக் கொண்ட சர்வதேச வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இவருக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் வீரர் எவின் லீவிஸ் 789 பந்துகளில் 100 சிக்சர்களை அடித்திருந்த நிலையில், அவரது சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
அபிஷேக் சர்மா 785 பந்துகளில் 100 சிக்சர்கள் விளாசி இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.