ஐபிஎல் 2026 - விக்கெட் கணக்கை தொடங்கிய பும்ரா..!

இதுவரை நடைபெற்று முடிந்த 5 போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட பும்ரா எடுக்கவில்லை.
ஐபிஎல் 2026 - விக்கெட் கணக்கை தொடங்கிய பும்ரா..!
Published on

அகமதாபாத்,

அகமதாபாத்தில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத்தை எதிர்கொண்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 199 ரன்கள் எடுத்தது. தில்க வர்மா சதம் விளாசி அசத்தினார். இதையடுத்து மும்பை நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில் குஜராத் அணி பேட்ஸ்மேன் சாய் சுதர்சனின் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதன் மூலம், நடப்பு ஐபிஎல் சீசனில் தனது முதல் விக்கெட்டை பும்ரா பதிவு செய்தார். இதுவரை நடைபெற்று முடிந்த 5 போட்டிகளிலும் ஒரு விக்கெட் கூட எடுக்காத பும்ரா, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தினார்.

Also Read
’திலக் வர்மாவிடம் உள்ள திறமைக்கு’... ஹர்திக் பாண்டியா புகழாரம்
ஐபிஎல் 2026 - விக்கெட் கணக்கை தொடங்கிய பும்ரா..!

இப்போட்டியில் அபார வெற்றி பெற்ற மும்பை அணி அடுத்து 23-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com