IPL Finals|ஐ.பி.எல். இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
IPL Finals|ஐ.பி.எல். இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு
Published on

ஆமதாபாத்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 28-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்று முடிவில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி குஜராத் அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.

நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி கடந்த ஆண்டை போலவே இந்த சீசனிலும் கம்பீரமாக வெற்றி நடைபோடுகிறது. லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு அணி முதலாவது தகுதி சுற்றில் ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை பந்தாடி 5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் அணி லீக் சுற்றில் 9 வெற்றி, 5 தோல்வியுடன் பெங்களூருவுடன் சமநிலை வகித்தாலும், ரன்-ரேட்டில் பின்தங்கியதால் 2-வது இடம் பிடித்தது. முதலாவது தகுதி சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய குஜராத் அணி 2-வது தகுதி சுற்றில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.

குஜராத்துக்கு சொந்த மைதான சாதகம்

சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சொந்த மைதானத்தில் விளையாடுவதால் கூடுதல் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மைதானத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைகளை நன்கு அறிந்திருப்பது குஜராத் அணிக்கு சாதகமாக அமையலாம்.

ஆர்.சி.பி.யின் இலக்கு - பட்டத்தை தக்கவைத்தல்

மறுபுறம், ரஜத் படிதார் தலைமையிலான ஆர்.சி.பி .அணி கடந்த சீசனில் வென்ற சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் களமிறங்குகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு துறைகளிலும் சமநிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டியை எட்டியுள்ளதால், ஆர்.சி.பி.யும் தன்னம்பிக்கையுடன் உள்ளது.

பரிசுத் தொகை

போட்டிக்கான பரிசுத் தொகை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டில் கோப்பையை வென்ற அணிக்கு ரூ.20 கோடி யும், 2-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. இதே பரிசுத் தொகை இந்த சீசனிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com