ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு
Published on

புதுடெல்லி,

14-வது ஐபிஎல் சீசனில் டெல்லியில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மீண்டும் மொயீன் அலி மற்றும் லுங்கி என்கிடி சேர்க்கப்பட்டுள்ளனர். டுவைன் பிராவோ மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியிலும் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அபிஷேக் சர்மா மற்றும் விராட் சிங் ஆகியோருக்குப் பதிலாக, சந்தீப் சர்மா மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து டாஸ் வென்ற ஐதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com