சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான ஐ.பி.எல். டிக்கெட் சென்னையில் நாளை விற்பனை

சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் மோதும் ஆட்டத்திற்கான ஐ.பி.எல். டிக்கெட் சென்னையில் நாளை விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான ஐ.பி.எல். டிக்கெட் சென்னையில் நாளை விற்பனை
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் இடையிலான லீக் ஆட்டம் வருகிற 30-ந்தேதி (மாலை 3.30 மணி) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.

இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. குறைந்தபட்ச விலையான ரூ.1,500-க்குரிய டிக்கெட்டுகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் விற்கப்படுகிறது. ரூ.2,000, ரூ.2,500 ஆகிய விலைக்கான டிக்கெட்டுகள் கவுண்ட்டரிலும் PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,000 மற்றும் ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டும் கிடைக்கும். ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது.

இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com