ஐ.பி.எல்; குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகள்...மலிங்காவின் சாதனையை முறியடித்த சுனில் நரேன்

நேற்று நடைபெற்ற 47வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 47வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்று முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி கொல்கத்தா வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 157 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக சால்ட் 68 ரன்கள் எடுத்தார். டெல்லி தரப்பில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அதே போல இந்த போட்டியில் சுனில் நரேன் வழக்கம் போல 4 ஓவரில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து அக்சர் படேல் விக்கெட்டை எடுத்தார்.

இந்த விக்கெட் மூலம் சுனில் நரேன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற மலிங்காவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள் விவரம்,

1. சுனில் நரேன் : 69*, ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா

2. லசித் மலிங்கா : 68, வான்கடே, மும்பை

3. அமித் மிஸ்ரா : 58, பெரோசா கோட்லா, டெல்லி

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com