

மும்பை,
ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸுக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐபிஎல் 2027 தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை மீண்டும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு டிரேட் செய்வதற்கான பேச்சுவார்த்தையை லக்னோ நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்காக தனது ரூ.27 கோடி ஊதியத்தை குறைத்துக்கொள்ள ரிஷப் பண்ட் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்தது. இதனால் அணியில் மாற்றம் செய்யும் முடிவில் நிர்வாகம் இருப்பதாக தெரிகிறது. அதன்படி, கேப்டன் மாற்றம் மற்றும் அணியை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ரிஷப் பண்ட் - குல்தீப் யாதவ் டிரேட் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
எனினும், இந்த வீரர்கள் பரிமாற்றம் தொடர்பாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.