வைபவ் சூர்யவன்ஷியின் ஜெர்சி எண் 3 - பின்னால் இருக்கும் சுவாரசிய காரணம்

வைபவ் சூர்யவன்ஷி , இந்திய அணிக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக இருக்கிறார்.
வைபவ் சூர்யவன்ஷியின் ஜெர்சி எண் 3 - பின்னால் இருக்கும் சுவாரசிய காரணம்
Published on

புதுடெல்லி,

வைபவ் சூர்யவன்ஷியின் இந்திய அணி ஜெர்சி எண் 3 தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டி20 அறிமுகம்

உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி , இந்திய அணிக்காக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாக இருக்கிறார். வருகிற 26-ம் தேதி பெல்பாஸ்ட்டில் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அவர் களமிறங்கினால், இந்திய ஆண்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை படைப்பார்.

கவனம் ஈர்த்த ஜெர்சி எண்

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வைபவ் சூர்யவன்ஷி, தேர்வு செய்யப்பட்டதை விட அவர் அணியவுள்ள ஜெர்சி எண் 3 தற்போது ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. சமீபத்தில் இந்திய அணியின் ஜெர்சி அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், அதில் இடம்பெற்றிருந்த எண் 3 அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அம்மாவின் ஆலோசனை

வைபவ் இதற்கு முன்பு 12 மற்றும் 18 ஆகிய ஜெர்சி எண்களை பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ஜெர்சி எண் 3-ஐ தேர்வு செய்ய அவருடைய தாய் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

"1 மற்றும் 2 ஆகிய எண்களை கூட்டினால் 3 வருகிறது. அதனால் 12 என்ற இரட்டை இலக்க எண்ணுக்கு பதிலாக நேரடியாக 3 என்ற ஒற்றை இலக்க எண்ணையே பயன்படுத்தலாம்" என்று அவரது தாய் கூறிய ஆலோசனையை ஏற்று, வைபவ் இந்த எண்ணை தேர்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற வீரர்கள் பயன்படுத்திய எண்

இந்திய கிரிக்கெட்டில் ஜெர்சி எண் 3-ஐ ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com