வைபவ் சூர்யவன்ஷியின் அணுகுமுறை நீண்ட காலத்திற்கு சாத்தியமானதா ? மேத்யூ ஹைடன் பேட்டி

வைபவ் சூர்யவன்ஷியின் துணிச்சலான ஆட்டம் உலக கிரிக்ட்டை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
வைபவ் சூர்யவன்ஷியின் அணுகுமுறை நீண்ட காலத்திற்கு சாத்தியமானதா ? மேத்யூ ஹைடன் பேட்டி
Published on

புதுடெல்லி,

ஐபிஎல் தொடரில் உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களைத் திணறடித்து சிறப்பாக விளையாடிய சூர்யவன்ஷியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடிபாம் பிடித்துள்ளார்.வைபவ் சூர்யவன்ஷியின் துணிச்சலான ஆட்டம் உலக கிரிக்ட்டை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி தொடர்பாக பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியதாவது,

வைபவ் சூர்யவன்ஷியின் துணிச்சலான மற்றும் எதையும் பொருட்படுத்தாத பேட்டிங் அணுகுமுறை பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தாலும், அவரின் அணுகுமுறையைப் பின்பற்ற முயலும் மற்ற இளம் வீரர்கள், அத்தகைய அணுகுமுறை நீண்ட காலத்திற்குச் சாத்தியமானதா என்று சிந்திக்க வேண்டும்.

மேலும் சுப்மன் கில்லின் பேட்டிங் பாணியும், வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டமும் டி20 கிரிக்கெட்டில் இணைந்து செயல்பட முடியுமா என்று கேட்கப்பட்டபோது, ​​

நாம் முற்றிலும் மாறுபட்ட இரு ஆளுமைகளைப் பற்றிப் பேசுகிறோம். இருவரின் (கில் மற்றும் சூர்யவன்ஷி) பாணிகளும் இணைந்து இருக்க முடியுமா? நிச்சயமாக முடியும். அவை ஏற்கனவே இணைந்துதான் செயல்படுகின்றன. வைபவ் சூர்யவன்ஷி போன்ற ஒருவரைப் பார்க்கும் எந்தவொரு இளம் வீரருக்கும் உள்ள சவால் என்னவென்றால், அந்தப் பாணியை நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியுமா என்பதுதான்.


சர்வதேச அளவில் சீரான திறனை வெளிப்படுத்த முடியும் என்பதை கில் ஏற்கனவே நிரூபித்துள்ளார்; என்னைப் பொறுத்தவரை, சர்வதேச கிரிக்கெட்டே மிக உயர்ந்த தரநிலையாகத் திகழ்கிறது. என தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com