ஜெகதீசன், அபராஜித் அதிரடி... திண்டுக்கல் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜெகதீசன் 81 ரன்கள் அடித்தார்.
image courtesy:twitter/@TNPremierLeague
image courtesy:twitter/@TNPremierLeague
Published on

திண்டுக்கல்,

9-வது டி.என்.பி.எல். தொடரில் திண்டுக்கல் நத்தத்தில் இன்று நடைபெற்று வரும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிகரன் களமிறங்கினர். இதில் மொஹித் 4 ரன்களிலும், ஆஷிக் 8 ரன்களிலும் விரைவில் ஆட்டமிழந்தனர். இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த கேப்டன் பாபா அபராஜித் - ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

திண்டுக்கல் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இருவரும் அரைசதத்தை கடந்தனர். இவர்களின் அதிரடியால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வலுவான நிலையை எட்டியது. இதில் பாபா அபராஜித் 67 ரன்களிலும் (44 பந்துகள்), ஜெகதீசன் 81 ரன்களிலும் (41 பந்துகள்) ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் அடித்துள்ளது. திண்டுக்கல் தரப்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி திண்டுக்கல் களமிறங்க உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com