ஜூனியர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி - இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

இந்திய அணியில் அதிகபட்சமாக காவ்யா படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
pakistan
Published on: 

அல் அமரத்,

19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு 338 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

உஸ்மான் கான் சதம்

ஓமனின் அல் அமரத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பர்ஹான் யூசுப் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தொடக்க வீரர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 111 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். இதில் 11 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு உறுதுணையாக விளையாடிய அப்துல் காதிர் 54 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும்.

கேப்டன் பர்ஹான் யூசுப் 60 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 337 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக காவ்யா படேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.

பதிலடி கொடுக்குமா இந்தியா?

இந்திய அணி 8 முறை ஜூனியர் ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இதனால் 9-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரின் லீக் சுற்றிலும் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.

எனவே, இந்த இரு தோல்விகளுக்கும் பதிலடி கொடுத்து இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

X