

சென்னை,
தமிழ்நாட்டின் பிரபல உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான 10-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) போட்டி அடுத்த மாதம் ஜூலை 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரில் பங்கேற்க விரும்பும் வீரர்களுக்கான பதிவு நடைமுறை நாளை முதல் தொடங்குகிறது. வருகிற 25-ந் தேதி வரை வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
வீரர்கள் டி.என்.பி.எல். அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணையதளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் பகவான்தாஸ் ராவ் வெளியிட்டுள்ளார். டி.என்.பி.எல். தொடரில் விளையாட விரும்பும் தகுதியான வீரர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
டி.என்.பி.எல். தொடர், தமிழ்நாட்டின் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான முக்கிய மேடையாக கருதப்படுகிறது. இந்த தொடரின் மூலம் பல வீரர்கள் உயர்நிலை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்னேறியுள்ளனர்.