ஐபிஎல்: கொல்கத்தா - டெல்லி இன்று மோதல்

கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
ஐபிஎல்: கொல்கத்தா - டெல்லி இன்று மோதல்
Published on

கொல்கத்தா,

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் பரபரப்பான இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பிளே ஆப் சுற்றுக்குள் பெங்களூரு, குஜராத், ஐதராபாத் அணிகள் நுழைந்துள்ளன. எஞ்சிய ஒரு இடத்திற்கு 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் 70வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன. கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

புள்ளிப்பட்டியலில் 8வது இடம்பெற்று பிளே ஆப் வாய்ப்பை இழந்த டெல்லி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. 13 புள்ளிகளுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ள கொல்கத்தா இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றாலும் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ராஜஸ்தான் - மும்பை ஆட்டம் முக்கியமானதாகும். அந்த ஆட்டத்தில் மும்பை வெற்றிபெற்றால் ராஜஸ்தான் பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறும்.

இதையடுத்து இரவு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லியை அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே கொல்கத்தா பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும். டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்தாலோ, குறைவான ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலோ பிளே ஆப் சுற்று வாய்ப்பை கொல்கத்தா இழக்கும். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள பஞ்சாப் (மும்ப்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வி, டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா தோல்வி) பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

X

Daily Thanthi
www.dailythanthi.com