

டிரெண்ட் பிரிட்ஜ்,
நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தற்போது வரை 28 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்களை எடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.