'கோலி ஒரு லெஜண்ட், பொக்கிஷம்' - கிறிஸ் கெயில் புகழாரம்!

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
விராட் கோலி
Published on: 

மும்பை,

விராட் கோலி ஒரு ஜாம்பவான், தனித்துவமான வீரர் என புகழ்ந்துள்ள கிறிஸ் கெயில், அவர் சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

“விராட் கோலி ஒரு ஜாம்பவான்!”

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் கிறிஸ் கெயில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியைப் பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது கோலியுடன் அறையைப் பகிர்ந்துகொண்ட அனுபவத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

'வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் லெஜெண்ட்ஸ்' தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன்ஸ் அணிக்காக விளையாடியபோது அளித்த பேட்டியில் கெயில் கூறியதாவது:

“விராட் கோலி ஒரு ஜாம்பவான். அவர் தனித்துவமானவர். பிரமிக்க வைக்கும் வீரர். அவரை பாராட்டுவதற்கு என்னிடம் வேறு வார்த்தைகள் இல்லை. அனைவரும் அவரை ‘கிங் கோலி’ என்று அழைக்கிறார்கள். கிரிக்கெட்டில் அவர் பல சாதனைகளைப் படைத்துள்ளார். குறிப்பாக, சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இன்னும் நீண்ட காலம் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சுருக்கமாகச் சொன்னால், அவர் மிகச் சிறந்த மனிதர்” என்று தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். கடசியாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்ற அவர், அடுத்ததாக நியூசிலாந்தில் நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாட உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com