ஐதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ பேட்டிங் தேர்வு

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
Image Courtesy: @IPL
Image Courtesy: @IPL
Published on

ஐதராபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

இரு அணிகளும் தலா 11 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி கண்டு 12 புள்ளிகள் பெற்றுள்ளன. இன்று நடைபெறும் ஆட்டத்தில் தோல்வி அடையும் அணிக்கு பிளே ஆப் சுற்று செல்வதற்கான வாய்ப்பு குறைந்துவிடும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com