

மும்பை,
ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அணியின் தற்போதைய பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனேவுடன் ,ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், புதிய தலைமைப் பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் மஹேலா ஜெயவர்தனேவும் இணைந்து, அணியின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு புதிய அணுகுமுறையைப் பின்பற்றுவதற்காகப் பரஸ்பர ஒப்புதலுடன் முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மூன்று முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்குக் கோப்பையை வெல்ல உதவிய மஹேலா ஜெயவர்தனே, அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்தவர்.
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படாமல் ஒன்பதாவது இடத்தைப் பிடித்த நிலையில், புதிய பயிற்சியாளர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.