மேஜர் லீக் கிரிக்கெட்; நைட் ரைடர்ஸை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த எம்.ஐ. நியூயார்க்


மேஜர் லீக் கிரிக்கெட்; நைட் ரைடர்ஸை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த எம்.ஐ. நியூயார்க்
x

image courtesy: @MINYCricket

எம்.எல்.சி. எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

புளோரிடா,

எம்.எல்.சி. எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - எம்.ஐ. நியூயர்க் அணிகள் மோதின. இந்த ஆட்டம் புளோரிடாவில் நடைபெற்றது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ. நியூயார்க் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்டு 50 ரன் எடுத்தார். நைட் ரைடர்ஸ் தரப்பில் ஷால்க்விக் 3 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 143 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் எம்.ஐ. நியூயார்க் அணி திரில் வெற்றி பெற்று இந்த தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக உன்முகுந் சந்த் 59 ரன்கள் எடுத்தார்.

1 More update

Next Story