மேஜர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் சீட்டில் ஆர்கஸ்-எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதல்

நியூயார்க் அணி 2-வது தகுதி சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
Image Courtesy : @MLCricket twitter
Image Courtesy : @MLCricket twitter
Published on

டல்லாஸ்,

6 அணிகள் இடையிலான முதலாவது மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) 20 ஓவர் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்-எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின.

'டாஸ்' ஜெயித்த நியூயார்க் அணி கேப்டன் நிகோலஸ் பூரன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 158 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக டிவான் கான்வே 38 ரன்னும், மிலின்ட் குமார் 37 ரன்னும் எடுத்தனர். கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் (6 ரன்) உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூயார்க் அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டும், டிம் டேவிட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய நியூயார்க் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஷயான் ஜஹாங்கிர் 36 ரன்னும், நிகோலஸ் பூரன் 23 ரன்னும், டிம் டேவிட் 33 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். டிவால்ட் பிரேவிஸ் 41 ரன்னுடனும், டேவிட் வைஸ் 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் சீட்டில் ஆர்கஸ்-எம்.ஐ.நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com