மேஜர் லீக் கிரிக்கெட்; 4வது தோல்வியை சந்தித்த எம்.ஐ. நியூயார்க்


மேஜர் லீக் கிரிக்கெட்; 4வது தோல்வியை சந்தித்த எம்.ஐ. நியூயார்க்
x

Image Courtesy: @MLCricket

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின.

டல்லாஸ்,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் - எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யூனிகார்ன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 246 ரன்கள் குவித்தது. யூனிகார்ன்ஸ் தரப்பில் மேத்யூ ஷார்ட் 43 பந்தில் 91 ரன்கள் அடித்தார்.

எம்.ஐ.நியூயார்க் தரப்பில் பொல்லார்டு 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 247 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த எம்.ஐ.நியூயார்க் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 47 ரன் வித்தியாசத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

எம்.ஐ.நியூயார்க் தரப்பில் குயிண்டன் டி காக் 70 ரன்னும், மோனங் படேல் 60 ரன்னும் எடுத்தனர். யூனிகார்ன்ஸ் தரப்பில் சேவியர் பார்ட்லெட், ரொமாரியோ ஷெப்பர்டு தலா 2 விக்கெட் வீழ்த்தினார். இந்த தோல்வியின் மூலம் 5 ஆட்டங்களில் ஆடியுள்ள எம்.ஐ.நியூயார்க் அணி 4 தோல்வியை சந்தித்தது.

1 More update

Next Story