மேஜர் லீக் கிரிக்கெட்; 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்


மேஜர் லீக் கிரிக்கெட்; ஹாட்ரிக் வெற்றி பெற்ற டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
x

Image Courtesy: @TexasSuperKings

தினத்தந்தி 17 Jun 2025 10:15 AM IST (Updated: 17 Jun 2025 10:15 AM IST)
t-max-icont-min-icon

டெக்சாஸ் தரப்பில் ஜியா உல் ஹக், நண்ட்ரே பர்கர், நூர் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

கலிபோர்னியா,

6 அணிகள் இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி) தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சியாட்டில் ஆர்காஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 153 ரன்கள் எடுத்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் சைதேஜா முக்கமல்லா 30 ரன் எடுத்தார். சியாட்டில் ஆர்காஸ் தரப்பில் ஜஸ்தீப் சிங், ஹர்மீத் சிங் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

தொடர்ந்து 154 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சியாட்டில் ஆர்காஸ் அணி, சூப்பர் கிங்ஸ் அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். வெறும் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த சியாட்டில் அணி 60 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் 93 ரன் வித்தியாசத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று இந்த தொடரில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. சியாட்டில் ஆர்காஸ் தரப்பில் ஆரோன் ஜோன்ஸ் 17 ரன் எடுத்தார். டெக்சாஸ் தரப்பில் ஜியா உல் ஹக், நண்ட்ரே பர்கர், நூர் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

1 More update

Next Story