'அதை விராட் கோலியை பார்த்து கற்றுக்கொண்டேன்' - ஆஸ்திரேலிய வீரர் மெக்ஸ்வீனி நெகிழ்ச்சி

இந்தியா ஏக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா ஏ அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
மெக்ஸ்வீனி
Published on: 

புதுச்சேரி,

இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் வீடியோக்களைப் பார்த்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டதே, இந்தியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என ஆஸ்திரேலியா ஏ அணி கைப்பற்ற உதவியதாக அந்த அணியின் பேட்டர் நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார்.

ஒருநாள் தொடரை வென்ற ஆஸ்திரேலியா ஏ

இந்தியா ஏ அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா ஏ அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா ஏ அணி 1-0 என்ற கணக்கில் வென்றிருந்தது.

ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடிய நாதன் மெக்ஸ்வீனி, 3 இன்னிங்ஸ்களில் 194 ரன்கள் குவித்தார். சராசரியாக 64.66 ரன்களும், 83.62 ஸ்டிரைக் ரேட்டும் பதிவு செய்த அவர், தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். இதன் மூலம் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்தியா ஏ அணி, கடைசிப் போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-2 என முடித்தது.

கோலி, ஸ்மித்

மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய மெக்ஸ்வீனி, இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்காக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் வீடியோக்களை பார்த்து தயாரானதாக கூறினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“ஆஸ்திரேலிய வீரராக இந்தியாவுக்கு வரும்போது, சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். இந்தியாவில் சுழற்பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை அறிந்துகொள்ள, யூடியூப்பில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் ஆட்டங்களை கவனமாக பார்த்துக் கற்றுக்கொண்டேன். அவற்றைப் போட்டியில் சரியாக செயல்படுத்தி வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com