நவாஸ் அபார பந்துவீச்சு... வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய பாகிஸ்தான்

பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
Image Courtesy: X(Twitter) / File Image
Image Courtesy: X(Twitter) / File Image
Published on

புளோரிடா,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 178 ரன் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 57 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 14 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் திரில் வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ், ஜுவெல் ஆண்ட்ரு தலா 35 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com