நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் ரத்து

இந்த போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டமும் ரத்து
Published on

கிரேட்டர் நொய்டா,

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மைதானத்தில் வடிகால் வசதி சரியாக இல்லாததால் தேங்கிய தண்ணீர் சீக்கிரம் வெளியேற்ற முடியவில்லை.

இதனையடுத்து இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இன்றும் மைதானத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற முடியாத சூழலால் 2-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் இன்னும் டாஸ் கூட போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com