இந்தியாவுக்கு எதிரான கடைசி 3 டி20 போட்டிகள்: நியூசிலாந்து அணியில் அதிரடி மாற்றங்கள்

டி20 தொடரின் முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து
Published on: 

வெலிங்டன்,

இந்தியாவுக்கு எதிரான எஞ்சியுள்ள 3 டி20 சர்வதேசப் போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2-0 என முன்னிலையில் இந்தியா

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

3-வது டி20 போட்டி 27-ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது. 4-வது போட்டி 30-ம் தேதி ஆக்லாந்திலும், கடைசிப் போட்டி நவம்பர் 1-ம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.

தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க நியூசிலாந்து அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. டி20 தொடரைத் தொடர்ந்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன.

லோக்கி பெர்குசன் விலகல்

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சியுள்ள 3 டி20 போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, வேகப்பந்து வீச்சாளர் லோக்கி பெர்குசன் 3-வது டி20 போட்டியில் விளையாட மாட்டார். கடைசி 2 போட்டிகளில் அவர் மீண்டும் அணியில் இணைவார்.

வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னர் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேட் பிஷர் 3-வது போட்டிக்கு மட்டும் மாற்று வீரராக அணியுடன் இருப்பார். அதன்பிறகு அவர் நியூசிலாந்து ஏ அணிக்குத் திரும்புவார்.

மேட் ஹென்றி

மேட் ஹென்றி எஞ்சியுள்ள டி20 போட்டிகளில் விளையாட மாட்டார். அவர் நவம்பர் 2-ம் தேதி ஆக்லாந்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியுடன் இணைவார்.

கைல் ஜேமிசன் 3-வது டி20 போட்டியில் விளையாடுவார். அதன்பிறகு, உள்ளூர் போட்டியில் பங்கேற்றுவிட்டு ஒருநாள் தொடருக்காக மீண்டும் நியூசிலாந்து அணியுடன் இணைவார். மேலும், ஜோஷ் கிளார்க்சன் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியில் இணைகிறார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com