அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நியூசிலாந்து வீரர்...உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சிக்கல்....!

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

வெல்லிங்டன்,

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் ஆட உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது.

உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் ஆட்டத்தில் டிம் சவுதி கைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அந்த ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே விலகினார்.

இந்நிலையில், டிம் சவுதியின் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com