வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: நியூசிலாந்து அணி அறிவிப்பு

image courtesy:ICC
நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் 3-வது டெஸ்ட் போட்டி 18-ம் தேதி நடைபெற உள்ளது.
வெலிங்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 1-0 (முதல் போட்டி டிரா) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 18-ம் தேதி மவுண்ட் மவுங்கானுயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி விவரம்: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், கிறிஸ்டியன் கிளார்க், டெவன் கான்வே, ஜேக்கப் டபி, ஜாக் போல்க்ஸ், டேரில் மிட்செல், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.
Related Tags :
Next Story






