நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்!

கடைசி இரண்டு போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்க உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்!
Published on: 

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் முதல் மூன்று போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் ஐயர் ஏற்க உள்ளார்.

இந்தத் தொடரில் இந்திய அணி இரண்டு கட்டங்களாக விளையாடுகிறது. முதல் மூன்று போட்டிகளும் நவம்பர் 4, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன. இதையடுத்து நவம்பர் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியை வழிநடத்துவார். இந்த இரண்டு போட்டிகளும் நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கனுய் மைதானத்தில் நடைபெற உள்ளன.

கேப்டன்

சுப்மன் கில் டெஸ்ட் தொடருக்கான தயாரிப்பில் கவனம் செலுத்த உள்ளதால், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார். இதனால் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டுள்ளார்.

X