27 ஆண்டுகளுக்கு பின்... தனது மோசமான சாதனையை தானே உடைத்த பாகிஸ்தான்

27 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முந்தைய மோசமான சாதனையை பாகிஸ்தான் அணி தானே முறியடித்துள்ளது.
27 ஆண்டுகளுக்கு பின்... தனது மோசமான சாதனையை தானே உடைத்த பாகிஸ்தான்
Published on

சென்னை,

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து கிரிக்கெட் உலகில் மிகவும் மோசமான சாதனையை பதிவு செய்தது.

மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் பாகிஸ்தான் அணி 30.4 ஓவர்களில் வெறும் 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பங்களாதேஷுக்கு எதிராக பாகிஸ்தான் பதிவு செய்த குறைந்த ஸ்கோராகும். இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராக 161 ரன்கள் எடுத்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது. தற்போது 27 ஆண்டுகளுக்கு பின்னர் தனது முந்தைய மோசமான சாதனையை பாகிஸ்தான் அணி தானே முறியடித்துள்ளது.

Also Read
’கோப்பையை வென்றதும் கம்பீர் சொன்ன முதல் வார்த்தை இதுதான்’ - சூர்யகுமார்
27 ஆண்டுகளுக்கு பின்... தனது மோசமான சாதனையை தானே உடைத்த பாகிஸ்தான்

வங்காளதேச பந்துவீச்சாளர்களில் நஹீத் ராணா 5 விக்கெட்டுகள் எடுத்து பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையை தகர்த்தார். மேலும் மெஹிதி ஹசன் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இன்று (பிற்பகல் 1.45 மணி) நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com