பாகிஸ்தான் - வங்காளதேசம் 2-வது டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்து

பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்க இருந்தது.
image courtesy: twitter/@ICC
image courtesy: twitter/@ICC
Published on

ராவல்பிண்டி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் வங்காளதேசம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அதே ராவல்பிண்டியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்க இருந்தது.

ஆனால் ராவல்பிண்டியில் கனமழை பெய்வதன் காரணமாக இந்த டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com