இறுதிப்போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்: பாகிஸ்தான் கேப்டன்

ஏற்கனவே பாகிஸ்தானும் (3 வெற்றி. ஒரு தோல்வி) இறுதி சுற்றை எட்டி விட்டது.

இறுதிப்போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்: பாகிஸ்தான் கேப்டன்
Published on: 

லாகூர்,

பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் லாகூரில் நேற்று நடந்த 5-வது லீக்கில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 25.3 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. உள்நாட்டில் பாகிஸ்தானின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும்.

இலங்கை அணி

அதிகபட்சமாக பாபர் அசாம் 29 ரன் எடுத்தார். இலங்கை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷன்கா 8.3 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 38 ரன் மட்டுமே விட் டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தி யாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. கமிந்து மென்டிஸ் (62 ரன்), பவன் ரத்னாயகே (23 ரன்) களத்தில் இருந்தனர். 2-வது வெற்றியை பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஏற்கனவே பாகிஸ்தானும் (3 வெற்றி. ஒரு தோல்வி) இறுதி சுற்றை எட்டி விட்டது.

இறுதிப்போட்டிக்குத் தயாராக வேண்டும்

தோல்வி தொடர்பாக பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் ஷா அப்ரிடி,

“துரதிர்ஷ்டவசமாக, கடந்த 3 அல்லது 4 போட்டிகளாக எங்களது டாப் ஆர்டர் பேட்டர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர். இந்தத் தொடர் முழுவதும் மிடில் ஆர்டர் பேட்டர்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தனர். ஆனால், இன்று அவர்களுக்கும் சாதகமான நாளாக அமையவில்லை. இருப்பினும், இந்த அணியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்றோம். இன்று தோல்வி ஏற்பட்டுள்ளது. இதை மறந்துவிட்டு, அடுத்து நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் டாப் ஆர்டர் பேட்டர்கள் சந்திக்கும் சிரமங்களைச் சரிசெய்வது குறித்து கேட்டபோது, இன்னும் 3 நாட்கள் உள்ளன. இந்த இடைவெளியில் அதற்கான பயிற்சியில் ஈடுபடுவோம் என்று நம்புகிறேன். இறுதிப்போட்டியில் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

இறுதிப்போட்டிக்காக அணியில் மாற்றங்கள் செய்வது குறித்துப் பேசுகையில், இன்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்வியை விரைவாக மறந்துவிட வேண்டும். கடந்த 3 போட்டிகளில் கிடைத்த வெற்றிகளிலிருந்து நேர்மறையான அம்சங்களை எடுத்துக்கொண்டு, இறுதிப்போட்டிக்குத் தயாராக வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com