பட்டம் வென்றும் அபராதத்தில் சிக்கிய பாகிஸ்தான் அணி... ஒரு ஓவர் குறைவாக வீசியதால் ஐ.சி.சி. நடவடிக்கை

முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின.
பாகிஸ்தான்
Published on: 

லாகூர்,

இலங்கை அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய நிலையில், மெதுவாகப் பந்துவீசியதற்காக அந்த அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதிய முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 31) லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 326 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணி, 48.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முத்தரப்பு ஒருநாள் தொடரின் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

5 சதவீதம் அபராதம்

இந்நிலையில், இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பாகிஸ்தான் அணி ஒரு ஓவர் குறைவாக வீசியது தெரியவந்ததையடுத்து, அந்த அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து தலா 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

X