

ராவல்பிண்டி,
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில், இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 35.3 ஓவர்களில் 98 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். சோனல் தினுஷா 21 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி 87.5 ஓவர்களில் 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் காசி கோரி 54 ரன்களும், அசான் அவைஸ் 47 ரன்களும், தயாப் ஆரிப் 46 ரன்களும் எடுத்தனர். ரவுல்லா 32 பந்துகளில் 42 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 227 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தன. லஹிரு உதாரா 7 ரன்களிலும், தினேஷ் சண்டிமால் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
கமிந்து மெண்டிஸ் 16 ரன்கள் எடுத்தார். இதனால் 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 22 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்துள்ளது. பசிந்து சூரியபண்டாரா 18 ரன்களுடனும், தனஞ்செய டி சில்வா 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னும் 153 ரன்கள் பின்தங்கியுள்ள அந்த அணி, 3-வது நாள் ஆட்டத்தில் சரிவிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.