2வது டி20: இலங்கைக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
2வது டி20: இலங்கைக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்
Published on: 

லாகூர்,

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டியில் பாகிஸ்தான் 215 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் இலங்கையை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.

2வது டி20

இந்நிலையில், பாகிஸ்தான், இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

215 ரன்கள் குவிப்பு

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் மாஸ் சதாகத் அதிகபட்சமாக 96 ரன்கள் குவித்தார். கேப்டன் சாஹிப்சாதா பர்ஹான் 73 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அந்த அணியின் இஷான் மலிங்கா, தசன் ஷனகா, மகிஷா தீக்சனா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு நோக்கி இலங்கை களமிறங்கி விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com