

லாகூர்,
பாகிஸ்தான், இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில் இலங்கையை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தான், இலங்கை இடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்ற பாகிஸ்தானும், முதல் வெற்றியை பதிவு செய்ய இலங்கையும் போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.