கடைசி டி20: பாகிஸ்தான் - இலங்கை நாளை மோதல்

நாளை மாலை 6.30 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது.
கடைசி டி20: பாகிஸ்தான் - இலங்கை நாளை மோதல்
Published on: 

லாகூர்,

பாகிஸ்தான், இலங்கை இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 2 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் அபார வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியுள்ளது.

3வது டி20

இந்நிலையில், பாகிஸ்தான், இலங்கை இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது. ராவல்பிண்டியில் உள்ள மைதானத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு இப்போட்டி நடைபெற உள்ளது.

இப்போட்டியில் வெற்றிபெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்ற பாகிஸ்தானும், ஆறுதல் வெற்றிபெற இலங்கையும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

X

Daily Thanthi
www.dailythanthi.com