பாதுகாப்பு எச்சரிக்கை: நியூசிலாந்து- பாக். இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து

18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இருந்த நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு எச்சரிக்கை: நியூசிலாந்து- பாக். இடையேயான கிரிக்கெட் தொடர் ரத்து
Published on

இஸ்லமாபாத்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ராவல் பிண்டி மைதானத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக முதல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதோடு, சுற்றுப்பயணத்தையும் முடித்துக்கொண்டு நியூசிலாந்து அணி நாடு திரும்ப உள்ளது. நியூசிலாந்து அரசு விடுத்த பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து போட்டித்தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு விளையாடச் சென்று இருந்தது.

பாகிஸ்தானுக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணி மீது கடந்த 2009 ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்குப் பிறகு பல ஆண்டுகள் வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்வதை தவிர்த்து வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com