"சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் துரோகம்" பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன ...?

சானியா மிர்சா முதன் முதலில் சமீபத்தில் சில சூசக பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்
"சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் துரோகம்" பிரிவுக்கு முக்கிய காரணம் என்ன ...?
Published on

புதுடெல்லி

ஆறு முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 2010 ஆம் ஆண்டு 5 மாதங்கள் காதலித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.

இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. சானியா மிர்சா கடந்த சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.இந்த தம்பதிகளுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

சானியா மிர்சா முதன் முதலில் சமீபத்தில் சில சூசக பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண!" என குறிப்பிட்டு இருந்தார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் கவலைப்படத் தொடங்கினர். இதை தொடர்ந்து இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் பரவின.

சானியா மற்றும் சோயப் இருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி ஒரு மவுனத்தை கடைப்பிடித்து வந்தனர். தற்போது மாலிக் நெருங்கிய வட்டாரத்தில் அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக உறுதியான தகவல்கள் வருகின்றன.

சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இருவரும் பிரிந்து உள்ளனர். அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாலிக் மற்றும் மிர்சாவின் குழப்பமான திருமணத்திற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் மாடல் ஆயிஷா உமர் என்று கூறப்படுகிறது.ஆயிஷாவுடனான அவரது நெருக்கமே மிர்சாவுடனான அவரது திருமண வாழ்க்கை விரிசலுக்கு வழிவகுத்தது என்று வதந்திகள் கூறுகின்றன.

சோயப் மாலிக் மற்றும் ஆயிஷா ஓமர் 2021 இல் ஒரு போட்டோஷூட்டில் ஒன்றாகக் கலந்துகொண்டனர். பின்னர், அதைப் பற்றி பேசிய மாலிக்,அவரை பாராட்டினார், மேலும் அவர்களின் படப்பிடிப்பின் போது அவர் தனக்கு நிறைய உதவி செய்ததாகக் கூறினார்.

ஆயிஷாஒரு பாகிஸ்தான் நடிகை மற்றும் பிரபலமான யூடியூபர் ஆவார். அவர் நீண்ட காலமாக பொழுதுபோக்கு துறையில் நன்கு அறியப்பட்ட பிரபலமாக இருந்து வருகிறார். பாகிஸ்தானின் மிகவும் நாகரீகமான நடிகைகளில் இவரும் ஒருவர்.பாகிஸ்தானில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஆயிஷாவும் ஒருவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com