ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட்...காயம் காரணமாக விலகும் மற்றொரு பாக். வீரர்..?

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
image courtesy; ICC
image courtesy; ICC
Published on

மெல்போர்ன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி முடிவில் 1-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அப்ரார் அகமது காயம் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர்கல் குர்ரம் ஷாசாத், நோமன் அலி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ள நிலையில் தற்போது அப்ரார் அகமதுவும் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com