

வெல்லிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்த வருடம் அக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறும் இந்த போட்டிகளில் விளையாடுவதற்கு இந்தியாவில் பிறந்தவரான அஜாஸ் பட்டேல் (வயது 29) நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் உள்ளூர் போட்டிகளில் சிறப்புடன் விளையாடி விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
அந்த அணியில் உள்ள மிட்செல் சான்ட்னெர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு நலம் பெற்று வருகிறார். அவருக்கு பதிலாக இடம் பெற்றுள்ள அஜாஸ் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார்.
அஜாசுடன், டாட் ஆஸ்சில் மற்றும் இஷ் சோதி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம் பெறுகின்றனர். இதனை நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஊடக தகவலில் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து அணி விவரம்:
கனே வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்சில், டாம் பிளெண்டல், டிரென்ட் போல்ட், காலின் டே கிராண்ட்ஹாம், மேட் ஹென்றி, டாம் லத்தம், ஹென்றி, நிக்கோல்ஸ், அஜாஸ் பட்டேல், ஜீத் ராவல், இஷ் சோதி, டிம் சவுதீ, ராஸ் டெய்லர், நீல் வேக்னர், பி.ஜே. வாட்லிங்.