பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி...இந்திய முன்னாள் வீரருடன் நடனமாடி கொண்டாடிய ரஷீத் கான்..!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி...இந்திய முன்னாள் வீரருடன் நடனமாடி கொண்டாடிய ரஷீத் கான்..!
Published on

சென்னை,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 282 ரன்கள் குவித்தது. இதையடுத்து 283 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் 49 ஓவர்களில் 286 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதானுடன் இணைந்து நடனமாடி வெற்றியை கொண்டாடி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com