பும்ராவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் நிலை - அஸ்வின் எச்சரிக்கை

இந்திய அணியின் வெற்றிகளில் பும்ராவின் பங்கு மிக அதிகம் என அஸ்வின் கூறினார்.
பும்ராவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் நிலை - அஸ்வின் எச்சரிக்கை
Published on

சென்னை,

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பற்றிய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. முக்கிய போட்டிகளில் அசத்தும் பும்ராவை அனைவரும் பாராட்டி வரும் நிலையில், அவருக்கு பிறகு இந்திய அணியின் நிலை என்ன என்பதே கேள்வியாக உள்ளது. இது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகளில் பும்ராவின் பங்கு மிக முக்கியமானது என அஸ்வின் கூறினார். அவரது தரத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை உருவாக்குவது எளிதல்ல என்றும், அவர் ஓய்வு பெற்ற பின் அணிக்கு சவால்கள் உருவாகலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read
16 ஆண்டுகளுக்குப் பிறகு... ’பிபா’ உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற வட கொரியா
பும்ராவுக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டின் நிலை - அஸ்வின் எச்சரிக்கை

மேலும், தற்போதைய கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ரசிகர்கள் சிக்ஸர்கள், அதிரடி ஆட்டங்களை அதிகம் விரும்புவதால், இளம் தலைமுறை வீரர்கள் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் என்றார்.

இதன் காரணமாக எதிர்காலத்தில் தரமான பந்துவீச்சாளர்களை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கலாம் என அஸ்வின் எச்சரித்துள்ளார். அவரது இந்த கருத்துகள் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com