2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் அட்டவணை வெளியீடு

2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் என இம்முறை இரண்டு ஆஷஸ் தொடர்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் அட்டவணை வெளியீடு
Published on

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆஷஸ் தொடரில் இம்முறை பெண்கள் அணியும் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சேர்ந்து இந்த அட்டவணையை அறிவித்துள்ளது.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காபா மைதானத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி நடக்கும். இரவு பகலாக நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் டிசம்பர் 16 தொடங்கும். பாரம்பரிய பாக்ஸிங் தின டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 26 தொடங்கும். நான்காவது டெஸ்ட் சிட்னி மைதானத்தில் ஜனவரி 5 அன்றும், கடைசி டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் ஜனவரி 14 அன்றும் நடைபெறவுள்ளன.

26 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக சிட்னி அல்லாத வேறொரு மைதானத்தில் ஆஷஸ் டெஸ்ட் இறுதிப்போட்டி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஆஷஸ் தொடர் ஜனவரி 27ஆம் தேதி கேன்பெர்ரா மைதானத்தில் தொடங்குகிறது. டெஸ்ட், டி20, ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளும் மகளிர் ஆஷஸில் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com