

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
இத்தொடரில், பேட்ஸ்மேன்கள் சிக்சர்களைப் பறக்கவிட்டு புதிய சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இரு அணிகளும் இணைந்து மொத்தம் 105 சிக்சர்களை விளாசின. இதன் மூலம், இருதரப்பு டி20 சர்வதேசத் தொடர்களில் அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட பட்டியலில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
100-க்கும் மேற்பட்ட சிக்சர்கள் அடிக்கப்பட்டது இது 4-வது முறையாகும். இந்தப் பட்டியலில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2023-24 தொடர் 120 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அதிக சிக்சர்கள் அடிக்கப்பட்ட தொடர்களின் பட்டியல்:
1. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் (2023-24): 120 சிக்சர்கள்
2. ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் (2025): 117 சிக்சர்கள்
3. இந்தியா - நியூசிலாந்து (2026): 116 சிக்சர்கள்
4. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் (2026): 105 சிக்சர்கள்