இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் விலகல்

மேட் ஹென்றியும் எஞ்சிய டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்.
இந்தியாவுக்கு எதிரான தொடர்: நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் விலகல்
Published on: 

இந்தியாவுக்கு எதிரான டி20 சர்வதேசப் போட்டித் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார். 2-வது டி20 போட்டியின்போது அவரது காயம் ஏற்பட்டது.

மேட் பிஷர்

அவருக்குப் பதிலாக மேட் பிஷர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், காயம் காரணமாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான மேட் ஹென்றியும் எஞ்சிய டி20 போட்டிகளில் விளையாட மாட்டார்.

இருப்பினும், லாக்கி பெர்குசன் அடுத்ததாக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என நியூசிலாந்து அணி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com