வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாட வேண்டும்; சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாட வேண்டும்; சேவாக்
Published on: 

டெல்லி,

வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்று வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி (வயது 15). இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். சூர்யவன்ஷி இந்திய அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதனிடையே, இம்மாத இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் டி20 தொடரில் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

சேவாக் கருத்து

இந்நிலையில், வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவுக்காக அதிக போட்டிகளில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சேவாக் கூறுகையில்,

வைபவ் சூர்யவன்ஷி அவரது ஆட்ட திறனின் உச்சத்தில் உள்ளார். முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும் என்ற அவரது எண்ணங்கள் என்னுடைய எண்ணங்கள் போன்றே உள்ளது. வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்போது அவர் இந்தியாவுக்காக எத்தனை போட்டிகளில் ஆடுகிறார் என்பதை பார்க்க வேண்டும். அவர் இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாட வேண்டும்.

என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com